சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.
வயிற்று கோளாறுகள்
கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தி
கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது.
தோல் குறைபாடுகள்
கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.
சுவாச நோய்கள்
ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோய் தடுப்பு
கருஞ்சீரக பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.
தலை முடி உதிர்வதை தடுக்கலாம்
கருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து, வாரம் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் அரைமணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
Comments
Post a Comment