முருங்கை முருங்கை மரத்தின் பொட்டநிக்கள் பெயர் ( Moringa oleifera ) கீரைகளில் மிகவும் சிறந்த ஒன்று முருங்கை கீரை. இதில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் காய், வேர், பட்டை, கீரை, பூ அனைத்திலும் ஏராளமான சத்துக்குள் மற்றும் பயன்கள உள்ளது. இப்பொழுது நாம் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சத்துக்களை காண்போம் உறவுகளே. சத்து நிறைந்த முருங்கை ஏழு ஆரஞ்சு பழத்தின் சக்தி வைட்டமின் சி அடங்கியது. . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அபரிமிதமாக உள்ளது. மற்ற கீரைகளை விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முரு...
சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம். பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது. கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என ...