முருங்கை முருங்கை மரத்தின் பொட்டநிக்கள் பெயர் ( Moringa oleifera ) கீரைகளில் மிகவும் சிறந்த ஒன்று முருங்கை கீரை. இதில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் காய், வேர், பட்டை, கீரை, பூ அனைத்திலும் ஏராளமான சத்துக்குள் மற்றும் பயன்கள உள்ளது. இப்பொழுது நாம் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சத்துக்களை காண்போம் உறவுகளே. சத்து நிறைந்த முருங்கை ஏழு ஆரஞ்சு பழத்தின் சக்தி வைட்டமின் சி அடங்கியது. . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அபரிமிதமாக உள்ளது. மற்ற கீரைகளை விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முரு...